News April 23, 2025
பிரபல இளம் நடிகை காலமானார்

ஹாலிவுட்டின் பிரபல இளம் நடிகை சோஃபி நிவெய்டி (24), அகால மரணமடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்மோத் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக அளவில் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் சோஃபி. அதன்பின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், தீவிர மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். RIP சோஃபியா!
Similar News
News April 24, 2025
40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.
News April 24, 2025
பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
News April 24, 2025
காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.