News April 23, 2025
EPS-ன் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Similar News
News September 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 456 ▶குறள்: மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. ▶பொருள்: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
News September 12, 2025
வெற்று விளம்பர திமுக ஆட்சி: நயினார்

4 ஆண்டு ஆட்சியில் திமுக அரசு வெற்று விளம்பரங்களை மட்டுமே செய்து வருவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை CM ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என அவர், X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது திமுகவின் மற்றொரு போலி தேர்தல் வாக்குறுதி எனவும் விலைவாசியை உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா என்றும் விமர்சித்துள்ளார்.
News September 12, 2025
2026 தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

2026 தேர்தல் தொடர்பாக மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார். இதில் 2026 தேர்தல் கூட்டணி மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் மநீம போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாஸிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.