News April 23, 2025
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்?

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 24, 2025
காஷ்மீர் நரகமாகி வருகிறது: சல்மான்

ஜம்மு & காஷ்மீர் போன்ற ஒரு சொர்க்கம், தீவிரவாத தாக்குதல்களால் தற்போது நரகமாகி வருவதாக சல்மான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதத்தின் பேரால் இந்த பேரழிவை நடத்த யாருக்கும் உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜும் கண்டித்துள்ளார்.
News April 24, 2025
10 பெண்களுடன் திருமணம்.. சிக்க வைத்தது கொலை

சத்தீஸ்கரில் 10 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனை கொலை சம்பவம் சிக்க வைத்துள்ளது. துலா ராம் என்பவர் 9 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்ற நிலையில், 10ஆவதாக ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் கல்யாண வீட்டில் அரிசி, சேலை உள்ளிட்டவற்றை திருடியதாக சந்தேகித்து அவரை கொலை செய்து காட்டில் வீசியுள்ளார். சடலம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி, துலா ராமை கைது செய்துள்ளது.
News April 24, 2025
நாங்கள் இந்திய மக்களுடன் நிற்கிறோம்: கம்மின்ஸ்

இக்கடுமையான தருணத்தில் ஆஸ்திரேலியர்களான நாங்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பஹல்காமில் நடந்தது மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் இந்திய மக்களுக்கு ஆதரவு குரல்கள் வரும் நிலையில், கம்மின்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.