News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 20, 2026
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 20, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 20, மாசி 8 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை:7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News February 20, 2026
தோல்வி பயத்தால் தேமுதிகவை திமுக இணைத்ததா? உதயநிதி

தோல்வி பயத்தால் திமுக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ந்துள்ளதாக எழும் விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது கூடுதல் பலம் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தேமுதிக இந்த பக்கம் வந்ததால் அதிமுக கூட்டணியின் பலம் குறையும் என்றும், இன்னும் 50 நாள்களில் அந்த உண்மை தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.


