News April 23, 2025
அமைச்சர் பதவியா? ஜாமினா? செந்தில் பாலாஜிக்கு செக்

அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமின் வேண்டுமா என செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை (இரண்டில் ஒன்று) திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
விளையாட்டில் அரசியல் உணர்வை கலக்கின்றனர்: PCB

Asia Cup லீக் சுற்றில் பாக்., உடனான வெற்றியை, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறினார். இது விளையாட்டு களத்தில் அரசியலை கலப்பது, விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று பாக்., கிரிக்கெட் வாரியம் (PCB) குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, இரு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
News September 18, 2025
கிராமிய வங்கிகளில் 13,217 இடங்கள்.. அப்ளை பண்ணுங்க

கிராமிய வங்கிகளில் 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆபீஸ் அசிஸ்டென்ட், ஆபிசர் ஸ்கேல்-1, ஸ்கேல்-2 (ஸ்பெஷலிஸ்ட் மேனேஜர்), ஸ்கேல்-2 (ஜெனரல் பேங்கிங்), ஸ்கேல்-3 (சீனியர் மேனேஜர்) பணியிடங்கள் அடங்கும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.21-ம் தேதி ஆகும்.
News September 18, 2025
கால் பதிக்க முடியாத இடங்கள்

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத இடம் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.