News April 22, 2025
MP-க்களே எஜமானர்கள்.. தன்கர் மீண்டும் பேச்சு!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் விதித்த SC-க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள் எனக் கூறியுள்ளார். டெல்லியில் பல்கலை நிகழ்வில் பேசிய அவர், நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட அதிக அதிகாரம் கொண்டது எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
ஜாகீர் கானிடம் இருந்து பிரசித் கற்க வேண்டும்: அஸ்வின்

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரில் ரன்களை வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்த பிரசித் கிருஷ்ணாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் அவர் தனது திறனுக்கு ஏற்ப பந்து வீச அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார். ஜாகீர் கானின் பந்து வீச்சில் இருந்து டெக்னிக்கை பிரசித் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
போதை பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கைது

போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதாகியுள்ள சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு பிரமுகர்களுக்கு தினேஷ் போதைப்பொருள் விற்றுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவேஷ் நடிப்பில் ‘லவ் ஓ லவ்’ என்ற படத்தை தினேஷ் ராஜ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளுக்கு நாள் அரசியல் கருத்துகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், தி.குன்றத்தில் தீபம் ஏற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நயினார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களோடு நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம் என்ற அவர், CM வேண்டுமானால் அங்காளி, பங்காளி என சொல்லலாம் என்றார். இந்த விவகாரத்தில் ஸ்டாலினை நினைத்து வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.


