News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News April 22, 2025
IPL: DC அணிக்கு 160 ரன்கள் இலக்கு

DC-க்கு எதிரான IPL போட்டியில், LSG அணி 159 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், LSG-ஐ பேட்டிங் செய்யப் பணித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய LSG அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் (52), மார்ஷ் (45) அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இருப்பினும், பின்னர் களமிறங்கியவர்கள் நிதானமாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
News April 22, 2025
அண்ணாமலையை MP ஆக்க பேச்சுவார்த்தை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா MP ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக, கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டால் அண்ணாமலை MP-யாக நாடாளுமன்றம் செல்வார்.