News April 22, 2025

ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

image

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

Similar News

News April 23, 2025

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம்

image

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. J&K தீவிரவாதிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 எண்களுக்கு எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை சம்பவ இடத்திற்குச் செல்லவும் CM உத்தரவிட்டுள்ளார்.

News April 22, 2025

ஓடும் பஸ்ஸில் இளம் ஜோடி அட்ராசிட்டி

image

நவிமும்பையில் ஓடும் அரசு பஸ்ஸில், ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ்ஸில் கூட்டம் இல்லாத நிலையில், பின்சீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ எடுத்து பதிவிட, விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தரங்கம் அவரவர் உரிமை, ஆனால், பொது இடத்தில் இப்படி செய்யலாமா?

News April 22, 2025

வானில் ஒளிரப் போகும் வெள்ளி

image

வீனஸ் கிரகம் (வெள்ளி), வரும் 24-ம் தேதி வானில் மிகவும் பிரகாசமாக காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும் அது, -4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும். வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் நிலவுக்கு அருகே வெள்ளிக்கிரகத்தை கண்டு களிக்கலாம். மீண்டும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் வெள்ளியை இதுபோன்று பிரகாசமாக பார்க்க முடியும்.

error: Content is protected !!