News April 19, 2025
டீ குடிக்குறப்ப சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா?

பலருக்கும் டீயுடன், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அப்பழக்கம் மிகவும் அபாயகரமானது என Annals of Internal Medicine வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கிறது *இதயம் *மூளை பக்கவாதம் *வயிற்றுப்புண் *நுரையீரல் சுருங்குதல் *நினைவாற்றல் இழப்பு *கை, கால்களில் புண்கள் *கரு உருவாமை பிரச்னை *ரத்த சோகை *மலச்சிக்கல் என போன்ற பிரச்னைகள் வரலாம். சிகரெட்டே கெடு. உடனே நிறுத்துங்கள். SHARE IT.
Similar News
News August 13, 2025
BREAKING: ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது.. இபிஎஸ்

OPS-ஐ அதிமுகவில் எந்த காலத்திலும் இணைக்க முடியாது என்று EPS அறிவித்துள்ளார். பாஜக – அதிமுக கூட்டணியில் மீண்டும் OPS இணைவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் கூறி வந்தார். டிடிவியும் OPS உடன் தேசிய பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், OPS-ஐ இணைக்க முடியாது எனக் கூறி, கூட்டணி பேச்சுக்கு EPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News August 13, 2025
இந்தியர்கள் மீதான தாக்குதலை கண்டித்த அயர்லாந்து அதிபர்

இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் இழிவானவை என அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹக்கின்ஸ் கண்டித்துள்ளார். மருத்துவம், தொழில் என பல துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும், அவர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாட்டின் மதிப்பிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
News August 13, 2025
கூலி பட டிக்கெட் ₹100 வரை அதிகமாக வசூலிக்க அனுமதி

நேற்று முதலே ஆந்திரா & தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ‘கூலி’ பட டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகிவிட்டது. இந்நிலையில், இப்பட டிக்கெட்டை கூடுதலாக ₹100 வரை விற்பனை செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஆக.14 – 23 வரை ஒரு திரை கொண்ட தியேட்டர்களில் ₹75, மல்டிபிளக்ஸ்களில் ₹100 என கூடுதலாக வசூலிக்கலாம். அதேபோல் ‘WAR 2’ படத்திற்கு ₹500 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.