News April 15, 2025
ரேஷனில் கண்விழியும் பதியலாம்.. KYC-ல் புதிய வசதி

<<16090104>>ரேஷன்<<>> அட்டைதாரர்களின் KYC பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் 90% வரை பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வயதானோரால் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயனாளர்களின் கண் விழித்திரையை ஸ்கேன் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மோகன் கூறியுள்ளார்.
Similar News
News August 21, 2025
தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.
News August 21, 2025
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: ரஹானே

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூர் போட்டிகளை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 2023 – 2024 ரஞ்சி கோப்பை வின்னிங் கேப்டனான இவர், இரானி டிராபியையும் வென்றார். இதனால் 2026 IPL சீசனில், ரஹானே KKR அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News August 21, 2025
இன்னும் சற்றுநேரத்தில் … ரெடியா இருங்க

தவெக மாநாடு சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜய்யை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், 4 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (3 மணிக்கு) மாநாட்டு மேடைக்கு விஜய் வருகிறார். இதன் காரணமாக தற்போது ஆதவ், என்.ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.