News April 14, 2025
கர்நாடகாவில் OBC இடஒதுக்கீடு உயர்வு?

கர்நாடகாவில் OBC-களுக்கான இடஒதுக்கீட்டை 31%-லிருந்து 51%ஆக அதிகரிக்க பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முஸ்லீம்களை OBC பட்டியலில் சேர்க்கவும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 4%லிருந்து 8%ஆக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, அம்மாநில அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
விஜய்யால் இதை செய்யமுடியுமா? சீமான்

செல்லும் இடங்களில் எல்லாம் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், EX CM அண்ணாதுரை பற்றி விஜய்யால் அரை மணி நேரம் பேசமுடியுமா என கேட்டு மீண்டும் அவரை அட்டாக் செய்துள்ளார். மேலும், திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா, அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர் என கூறிய அவர், இரு துருவங்களாக இருக்கும் இவர்களை வைத்து விஜய் அரசியல் செய்வதால் தான் அவரை எதிர்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
News September 16, 2025
Sports Roundup: WAC-ல் ஏமாற்றிய இந்திய வீரர்கள்

* இந்தியா A – ஆஸி. A இடையிலான 4 நாள் டெஸ்ட் லக்னோவில் இன்று தொடங்குகிறது. * உலக தடகள சாம்பியன்ஷிப், நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 25வது இடம் பிடித்து ஏமாற்றம். * உலக தடகள சாம்பியன்ஷிப், 110மீ தடை ஓட்டத்தில் 0.06 விநாடிகளில் அரையிறுதி வாய்ப்பை தேஜஸ் ஷிர்ஸ் தவறவிட்டார். *புரோ கபடி லீக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 40-37 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.
News September 16, 2025
காலையில் கடுகு காபி குடிங்க.. அவ்வளோ நல்லது!

கடுகு காபி செரிமானத்தையும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கடுகு எடுத்து மிதமான தீயில், நன்கு வெடித்து வாசம் வரை வறுக்கவும் *அதை மிக்ஸியில் போட்டு, காபி பொடியை போல நன்றாக அரைத்துக் கொள்ளவும் *இந்த கடுகு பொடியை, கொதிக்க வைத்த நீரில் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் *அதில் வெல்லம் சேர்த்தால், கடுகு காபி ரெடி. SHARE.