News April 10, 2025
ஹாலிவுட் நடிகர் மெல் நோவாக் காலமானார்!

பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் மெல் நோவாக் (93) வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர், புரூஸ் லீயுடன் ‘Game of Death’ படத்திலும், ‘Eye for an eye’, ‘Black Belt Jones’ போன்ற ஆக்ஷன் படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இவரின் மறைவு செய்தியை அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
உள்ளாட்சி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

டிச.9, 11-ல் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இடுக்கி, பாலக்காடு, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்களை EPS நியமித்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற அப்பகுதியில் வலுவானவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 3, 2025
அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசிய OPS

அவசரப் பயணமாக நேற்று டெல்லி சென்ற OPS அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் TN அரசியல் சூழல் குறித்து பேசியதாக OPS தெரிவித்துள்ளார்.<<18381772>> EPS-க்கு 15-ம் தேதி<<>> வரை அவர் கெடு விதித்திருக்கும் நிலையில், நடந்த இந்த சந்திப்பு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சந்திப்புக்கு பின் OPS-ன் அரசியல் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
News December 3, 2025
இந்தியா வரும் புடின்.. 4 டஜன் ஆட்களை இறக்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. NSG கமாண்டோக்கள், ஸ்னைப்பர்ஸ், டிரோன்கள், AI கண்காணிப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர 40-க்கு மேற்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளும் டெல்லி வந்துள்ளனர். முக்கியமாக, <<18411863>>புடின்<<>> பயன்படுத்தும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட Aurus Senat சொகுசு காரும் இந்தியா வருகிறது.


