News April 3, 2024

விருதுநகரில் லோடுமேன் மரணம் 

image

விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் லோடுமேன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வி.வி.ஆர் சிலை அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News February 17, 2026

விருதுநகர்: பாம்பு கடித்து ஒருவர் பரிதாப பலி.!

image

செண்பகத்தோப்பு பகவதி நகர் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா (59). இவரது மனைவி சின்னத்தாய் (50). இருவரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், முத்தையா தேடிச் சென்ற நிலையில், ஓடை பகுதியில் மலைப்பாம்பு கடித்து (சுற்றியதில்) உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 16, 2026

விருதுநகர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

விருதுநகர்: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

image

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <>www.tabcedco.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!