News April 5, 2025
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு படங்கள்

பிறமொழி படங்களின் இன்ஸ்பிரேஷனில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். *அவ்வை சண்முகி: 1993ல் வெளியான ஹாலிவுட் படமான Mrs. Doubtfire. *கஜினி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Memento. *தீபாவளி: கொரிய படமான Moment to Remember. *விருதகிரி: 2008ல் வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் படமான Taken. ஜிகர்தண்டா: கொரிய கேங்ஸ்டர் படமான Dirty Carnivel.
Similar News
News October 20, 2025
ALERT: கனமழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News October 20, 2025
இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
பட்டாசு வெடிக்கும்போது கண்கள் பத்திரம்!

பட்டாசு புகையால் நுரையீரலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் பாதிப்புகள் வரலாம். சாதாரண கண் எரிச்சலில் தொடங்கி, மாலைக்கண், கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளதுனு டாக்டர்கள் சொல்றாங்க. எனவே, ➤பட்டாசு வெடிக்கும்போது கண்ணாடி அணியுங்கள் ➤எரிச்சல் ஏற்பட்டால் உடனே தண்ணீரில் கழுவுங்கள் ➤பட்டாசு வெடித்த கையை கண்ணில் வைக்க வேண்டாம் ➤பட்டாசு வெடிக்கும் குஷியில் ரொம்ப நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்காதீங்க. SHARE.