News April 3, 2025
பீம்ஸ்டெக் என்றால் என்ன?

வங்காள விரிகுடா அருகிலுள்ள நாடுகள் இடையே பொருளாதார தொடர்பை ஏற்படுத்த 1997இல் உருவாக்கப்பட்டது பீம்ஸ்டெக். இதில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் அங்கம் வகிக்கின்றன. மோடி பிரதமரான பிறகு பீம்ஸ்டெக்கிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. பீம்ஸ்டெக் நாடுகள் மக்கள் தொகை 167 கோடி. ஜிடிபி 2.88 டிரில்லியன் டாலர். 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.
Similar News
News April 10, 2025
சிம் கார்டு வாங்குவதற்கு முன் இதை கவனியுங்க!

புதிய சிம் கார்ட்டை வாங்குவதற்கு முன், ஒரு முக்கிய விஷயத்தை கவனியுங்க. வாங்கப் போகும் சிம் கார்டின் நெட்வொர்க் உங்க ஏரியாவில் நன்றாக இருக்கிறதா? என்பதை நல்லா செக் பண்ணுங்க. வாங்கி உபயோகித்து, ‘அய்யய்யோ’ என புலம்புவதை விட, சோதித்துவிட்டு வாங்குவது மேல். உங்களின் நண்பரோ, தெரிந்தவரிடமோ அந்த சிம் இருந்தால், சோதித்துவிடுங்கள். சிம் ஸ்பீட் டெஸ்ட் என்ற சேவைகள் ஆன்லைனில் உள்ளன. SHARE IT.
News April 10, 2025
மொட்டை அடித்துக் காெண்ட நடிகை சாந்தி பிரியா

நடிகை சாந்தி பிரியா, தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன், ரயிலுக்கு நேரமாச்சு, விஜயகாந்தின் சிறையில் பூத்த சின்ன மலர் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக சாந்தி பிரியா நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். மொட்டை அடித்த படத்தை பகிர்ந்துள்ள அவர், புரட்சிக்காக இதை செய்யவில்லை, அமைதிக்காக செய்துள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
News April 10, 2025
வீட்டு கடன்கள் மீதான வட்டி 8%க்கும் கீழ் குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி தொடர்ந்து குறைக்கப்படுவதன் எதிரொலியாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8% கீழ் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டியை 2 முறை தலா 25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. எனினும், வங்கிகள் இன்னும் 8.15%க்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. அது வரும் நாள்களில் குறையக்கூடும் எனத் தெரிகிறது.