News April 3, 2025
கிட்னியை கூட தறோம்.. உதவுங்க! கதறும் விவசாயி!

மகாராஷ்டிராவின் மார்க்கெட்டில், விவசாயி ஒருவர் வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க தயார் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடனுக்காக மனைவியின், இரு மகன்களின் கிட்னியையும் விற்கவும் தயார் என்றும் அவர் கூறுகிறார். இல்லையென்றால், தற்கொலை ஒன்றே தீர்வு என்றும் சொல்கிறார். தேர்தலுக்கு முன் அரசு சொன்ன விவசாய கடன் ரத்து என்பதை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
Similar News
News April 4, 2025
வக்ஃப் மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

வக்ஃப் மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் எம்.பி. முகமது ஜாவேத்தும், AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசியும் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மசோதா உள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News April 4, 2025
மிட்செல் மார்ஷின் விசித்திர சாதனை

லக்னோ – மும்பை இடையேயான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பவர்-பிளேவில் வீசப்பட்ட 36 பந்துகளில் அவர் மட்டுமே 30 பந்துகளுக்கு பேட்டிங் செய்துள்ளார். அதில், அதிரடியாக 60 ரன்களையும் அவர் விளாசினார். ஆனால், பவர்-பிளே முடிந்தவுடனே அவர் ஆட்டமிழந்துவிட்டார். IPL வரலாற்றில், பவர்-பிளேவில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் ஆனார் மார்ஷ்.
News April 4, 2025
ரேப் புகார்… 25 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய நடிகர்!

இங்கிலாந்து பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவரும், நகைச்சுவை நடிகருமான ரஸ்ஸல் பிராண்ட் மீது ரேப் புகார்கள் பதிவாகி இருப்பதாக லண்டன் போலீஸ் தெரிவித்துள்ளது. 1999-ல் ஒரு பெண்ணை ரேப் செய்ததாகவும், 2004-ல் ஒரு பெண்ணை வாய்வழி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே 2-ல் கோர்ட்டில் ஆஜராகி அவர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.