News April 3, 2025
கிட்னியை கூட தறோம்.. உதவுங்க! கதறும் விவசாயி!

மகாராஷ்டிராவின் மார்க்கெட்டில், விவசாயி ஒருவர் வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க தயார் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடனுக்காக மனைவியின், இரு மகன்களின் கிட்னியையும் விற்கவும் தயார் என்றும் அவர் கூறுகிறார். இல்லையென்றால், தற்கொலை ஒன்றே தீர்வு என்றும் சொல்கிறார். தேர்தலுக்கு முன் அரசு சொன்ன விவசாய கடன் ரத்து என்பதை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
Similar News
News January 25, 2026
இன்று கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா விஜய்?

விஜய் பங்கேற்கும் தவெக செயல்வீரர்கள் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜன நாயகன் பிரச்னை, கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை என எது குறித்தும் அவர் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள தவெக கூட்டத்தில், விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கும் தொண்டர்கள், கூட்டணியா (அ) தனித்து போட்டியா என்பதையும் அறிவிப்பார் என கூறுகின்றனர்.
News January 25, 2026
பாஜகவுக்கு 30 சீட்.. EPS போடும் கணக்கு

வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதல் சீட்களை தர EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக 40 சீட் கேட்ட நிலையில், 20 சீட் மட்டுமே என EPS கறார் காட்டினாராம். தற்போது பாஜகவின் நடவடிக்கையால் அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் உற்சாகத்தில் உள்ள EPS, 30 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
News January 25, 2026
மகளிர் உரிமைத் தொகை.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

1.30 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மகளிரும் இதுவரை ₹29,000 பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை தங்களது அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என ஒவ்வொரு மகளிரும் கூறுவதாகவும் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


