News April 3, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் உங்கள் பிரச்சனைகள் கூட நிரந்தரம் இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. *பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால், வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை திருப்பித் தர முடியாது.
Similar News
News October 21, 2025
மச்சினனுக்கு அண்ணி கொடுத்த தண்டனை

உ.பி.,யில் 20 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அண்ணியின் தங்கையை காதலித்த இளைஞர் உமேஷ், பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், தன் தங்கை கவலையில் வாடுவதை பொறுக்க முடியாத அண்ணி மஞ்சு, தூங்கிக் கொண்டிருந்த உமேஷை சரமாரியாக குத்தியதுடன், அவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்தார். இளைஞர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
News October 21, 2025
இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரஸூல், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்த முதல் வீரரான இவர், ஒரு டி20 மற்றும் ஒரு ODI போட்டியில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடிய முதல் காஷ்மீர் வீரரும் இவர் தான். 17 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் விளையாடி வரும் இவர் 352 விக்கெட்களுடன் 5,648 ரன்கள் குவித்துள்ளார்.
News October 21, 2025
பட்டாசுகள் வெடித்ததால் அதிகரித்த காற்று மாசு

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு சராசரியாக 350ஆக பதிவாகியுள்ளது. இது நாம் சுவாசிக்கும் காற்று உகந்ததாக இல்லை என்பதை குறிக்கிறது. எங்கும் புகைமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.