News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News April 4, 2025
மக்கள் பிரச்னையை பேசக் கூடாதா? இபிஎஸ் கொந்தளிப்பு

பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் இபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் இபிஎஸ் பேசுகையில், பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேச அனுமதியில்லை. 10 நாள்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
தங்க நகைக் கடன்: RBI-க்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

தங்க நகைக் கடன் புதிய விதிமுறை தொடர்பாக பதிலளிக்க RBI-க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை வட்டியோடு அசல் தொகை செலுத்தி நகைகளைப் பெற்று, மறுநாள் <<15799668>>புதிதாக அடகு <<>>வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய நிதித்துறைச் செயலர், RBI மேலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 4, 2025
பேரவையில் எதிரொலித்த ‘எம்புரான்’ பட சர்ச்சை

‘எம்புரான்’ படத்தில் முல்லைப் பெரியாறு குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை எனவும் படம் வெளியான பிறகுதான் தெரியவந்தது என்றும் விளக்கம் அளித்தார். எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் எனக் காட்சி இடம்பெற்றுள்ளதாக MLA வேல்முருகன் பேசிய நிலையில், விளக்கம் அளிக்கப்பட்டது.