News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 22, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.