News April 2, 2025
வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 4, 2025
மிக மோசமான ரெக்கார்ட்.. இனி KKRஐ SRH மறக்கவே மறக்காது.!

SRH அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று KKR அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம், IPL தொடரில் தனது மிகப்பெரிய தோல்வியை அந்த அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், SRH CSK அணியிடம் கடந்த ஆண்டு 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே ரெக்கார்டாக இருந்தது. 300 ரன்கள் விளாசப்போகும் முதல் IPL அணி என ரசிகர்கள் கருதும் அணி, தொடர்ந்து தடுமாறி வருவதற்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
News April 4, 2025
INDIA கூட்டணி ஆட்சியில் வக்ஃபு மசோதா ரத்து: மம்தா

மத்தியில் புதிய அரசு அமையும் போது, வக்ஃபு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டைப் பிரிப்பதற்காக இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய அரசு அமையும் போது, மசோதாவை ரத்து செய்ய தேவையான திருத்தங்களை செய்வோம் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை, மாநிலங்களையில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
News April 4, 2025
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் 20 காசுகள் விலை குறைந்து ₹4.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் 1 முட்டை ₹5 முதல் ₹5.50 வரை விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரிப்பு, அதேநேரத்தில் நுகர்வு குறைவு காரணமாக இந்த விலை குறைப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.