News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
Similar News
News April 4, 2025
மீண்டும் கேப்டன் ஆகும் தோனி?

CSK அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவுள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டன் ஆகலாம். ஆனால், இப்போது ஏதும் சொல்ல முடியாது” என்றார். தோனி மீண்டும் கேப்டன் ஆனால் மாற்றம் இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News April 4, 2025
ரோஹித் சர்மா இல்லாமல் களமிறங்கும் மும்பை அணி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், அந்த அணியின் பிளேயிங் XI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு இடமில்லை. கடந்த போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அவர், முழங்கால் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை என கேப்டன் ஹர்திக் தெரிவித்துள்ளார். ரோஹித் இல்லாமல் மும்பை களமிறங்குவதை எப்படி பார்க்கிறீர்கள்?
News April 4, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.