News March 29, 2025

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

image

ஜோர்டனில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 62 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். வடகொரிய வீராங்கனை ஜி கிம்மை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் மனிஷா வீழ்த்தினார். அதேபோல், 53 கிலோ எடை பிரிவில் அந்திம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ம்ன்ப்ம்ன்

Similar News

News April 2, 2025

இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.. Apply Now

image

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2025

உங்கள் SBI கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதா?

image

SBI வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையில் நேற்று திடீர் தடங்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பை சந்தித்தனர். இதனிடையே வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். பணம் இன்னும் வரவு வைக்கப்படாததால் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என பலர் முறையிட்டுள்ளனர். இதற்கு எஸ்பிஐ இன்னும் பதிலளிக்கவில்லை. நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்திருக்கிறீர்களா?

News April 2, 2025

மியான்மரை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

image

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மியான்மர், தாய்லாந்து போல் பாகிஸ்தானில் பெரும் சேதம் இல்லை. உயிரிழப்புகள் பற்றி இதுவரை அரசு சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

error: Content is protected !!