News March 24, 2025
வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 27, 2025
வக்பு வாரிய மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பேரவையில் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக MLA வேலுமணி வக்பு வாரியத்தின் அடிப்படையை தகர்க்கும் வகையில் மசோதா இருப்பதாகவும், 40–க்கும் மேற்பட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் சாடினார். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
News March 27, 2025
வீர தீர சூரன் வழக்கு: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வீர தீர சூரன் படம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதில், B4U நிறுவனத்திற்கு படத்தை தயாரித்த HR pictures ₹7 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் கெடு விதித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்ற தகவல் இல்லை.
News March 27, 2025
25% கூடுதல் வரி: பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள்

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியாவையும் பாதிக்கும். அமெரிக்க சந்தையில் வலுவான தடத்தை பதித்திருக்கும் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர், 650 சிசியை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு, ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.