News March 15, 2025
குடும்பத்துடன் Chill செய்யும் ரோகித் சா்மா

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்துடன் கடலின் அழகை ரசித்த அவர், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடருக்காக மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
Similar News
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
RECORD: லெஜண்ட்களை முந்திய ஜெய்ஸ்வால்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 28 ரன்களில் அவுட்டாகினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில்(40 இன்னிங்ஸ்) 2000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முன்னதாக சேவாக் & டிராவிட் 40 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்தனர். இதன் மூலம் சச்சின், கம்பீர், கவாஸ்கர் போன்ற லெஜெண்ட்களின் சாதனையை முந்தியுள்ளார்.
News July 5, 2025
அங்கன்வாடிகளை மூடி வரும் அரசு.. பின்னணி என்ன?

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், இந்த ஆண்டு 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை 147, கோவை, 57, ஈரோடு 49, விழுப்புரம் 42, குமரி 21, சேலம் 21, வேலூர் 13 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஒரு அங்கன்வாடி மையம் கூட மூடப்படவில்லை.