News March 14, 2025
டிரம்ப் வைத்த ஆப்பு.. மஸ்கிற்கு பேக்ஃபயர் ஆன சோகம்

டிரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள், எலான் மஸ்கிற்கு எதிராகவே திரும்பியுள்ளன. டிரம்புக்கு போட்டியாக, USA இறக்குமதிகளுக்கு மற்ற நாடுகளும் அதிகம் வரி விதிக்க தொடங்கினால், அது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டெஸ்லா EV கார்களின் உற்பத்தி விலை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்வது கடினமாகும் என அந்நிறுவனம், டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்

கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ஐபிஎல் 2025 தொடர். வருகிற 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
News March 15, 2025
4 தனித்துவமான இயக்குநர்கள்: அஸ்வத் நெகிழ்ச்சி

வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 4 தனித்துவமான இயக்குநர்களை இயக்கியது மறக்க முடியாதது என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ந்துள்ளார். ‘டிராகன்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்த அவர், நினைவில் கொள்ளவேண்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், இயக்குநர்கள் KS ரவிக்குமார், கெளதம் மேனன், மிஸ்கின், பிரதீப் ஆகியோர் உடன் அஸ்வத்தும் இருக்கிறார். இதில் உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்?.
News March 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!