News March 29, 2024

கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு

image

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 182/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். KKR அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும் வென்றார்.

Similar News

News December 29, 2025

பெட்டிக்கடையில் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணலாமா..

image

சோடா பாட்டில திரும்ப கொண்டு வந்தாதான் மிச்ச காச தருவேன், இம்புட்டூண்டு வெத்தலைக்கு இம்பூட்டு சுண்ணாம்பா, என்னாதிது பிரைஸ்ல நமக்கு மட்டும் ஜோக்கரா வருது என்ற பேச்சுக்கெல்லாம் நம்மூரு பெட்டிக்கடை தான் சொந்தம் கொண்டாடும். அந்தந்த கடைகளுக்கு அதன் ஓனரின் பெயர்களே அடையாளம் என்பது மற்றொரு சுவாரஸ்யம். உங்கள் ஊர் பெட்டிக்கடையின் பெயர், அதில் உங்களுக்கு பிடித்த பொருள் என்னவென்று கமெண்ட் பண்ணுங்க.

News December 29, 2025

தவெகவில் மற்றொரு அதிமுக தலைவர் இணைந்தார்

image

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், நேற்று Ex MLA சி.கிருஷ்ணன் அக்கட்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது மற்றொரு அதிமுக Ex MLA மரியமுல் ஆசியா செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பொங்கலுக்கு முன் இன்னும் பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறியுள்ளார்.

News December 29, 2025

BSNL அதிரடி ஆஃபர்.. அதிகரித்த டேட்டா!

image

வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வரும் BSNL நிறுவனம், முக்கியமான ரீசார்ஜ் பிளானில் டேட்டாவை அதிகரித்துள்ளது. ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 மாதத்திற்கு தினமும் 2.5GB டேட்டா சேவையை பெறலாம். தற்போது, அது தினமும் 3GB ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே சேவையை பிற நெட்வொர்க்குகளில் பெற ₹400 வரை செலவிட வேண்டும். இந்த ஆஃபர் ஜன.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

error: Content is protected !!