News March 29, 2024

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை

image

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

image

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லாண்ட்(84) காலமானார். கோல்டன் குளோப் உள்ளிட்ட மதிப்புமிக்க பல விருதுகளை வென்ற இவர், 1987-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Sting (1973), Private Benjamin (1980), JFK (1991), Bruce Almighty (2003) உள்ளிட்ட 260-க்கும் மேற்பட்ட படங்களில் கிர்க்லாண்ட் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 11, 2025

தேன் கெட்டுப்போவதில்லை… ஏன் தெரியுமா?

image

தேன் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப்போகாது என்பார்கள். ஆனால் அது, முறையாக மூடி பாதுகாக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. அப்போதுதான் அது கெட்டுப்போகாமல் இருக்கும். சுவை மிகுந்த தேன், எப்படி நீண்டநாள் கெடாமல் அப்படியே உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News November 11, 2025

EXIT POLL: ஆட்சியமைக்கும் மகாகத்பந்தன்?

image

பிஹாரில் மகாகத்பந்தன் ஆட்சியை பிடிக்கும் என Journo Mirror கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டுள்ளது. மகாகத்பந்தன் 130-140 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக NDA கூட்டணி 100-110 தொகுதிகளும், ஒவைசியின் AIMIM 3-4 தொகுதிகளும், இதர கட்சிகள் 0-3 தொகுதிகளும் வெல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என கூறியிருந்தன.

error: Content is protected !!