News February 21, 2025
அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. அதாவது, நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், அதற்கடுத்த 2 நாள்களுக்கு இயல்பை ஒட்டி காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News February 22, 2025
சட்டத்திற்குள் அடங்காத தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே தமிழ்நாடு சிறப்பு விதிவிலக்கு பெற்றிருக்கிறது. எதில் தெரியுமா? இந்தியாவிற்கான அலுவல் மொழிகள் விதிகள் 1963ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதில் இரண்டாவது வரியிலேயே, “இந்த விதிகள், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதிற்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று அன்றே சட்டம் இயற்றப்பட்டது.
News February 22, 2025
“ரூ.10 ஆயிரம் கோடி தந்தாலும் அப்பாவத்தை செய்யமாட்டேன்”

எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. அதேநேரம் தேசிய புதிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை என விமர்சித்துள்ளார் CM ஸ்டாலின். கடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ரூ.2,000 கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி தமிழ் சமுதாயம் போய்விடும். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்றார்.
News February 22, 2025
நைட்ல கண்டிப்பா பல் துலக்குங்க…

இரவில் உறங்கச் செல்லும் முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டுமாம். இல்லையென்றால் இதய நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு எச்சரிக்கிறது. அதிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ரிஸ்க் அதிகம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இரவில் உறங்கும்போது சாலிவா உற்பத்தி குறைந்து விடுவதால் பற்களில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்கள் எளிதாக உடலுக்குள் நுழைவதே இதற்கு காரணமாம்.