News February 21, 2025
உயிரைப் பறித்த Butterfly Challenge: பெற்றோருக்கு எச்சரிக்கை!

பிரேசிலில் 14 வயது சிறுவன் டாவி, ஆன்லைன் சேலஞ்சில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளான். பட்டாம்பூச்சியை கொன்று, தூளாக்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்வதே, பட்டர்பிளை சேலஞ்ச். இதை பார்த்து டாவியும், காலில் ஊசிமூலம் செலுத்திக் கொண்டான். அதன்பின் ஊசி குத்திய இடம் செப்டிக் ஆனதாலும், பட்டாம்பூச்சி உடலில் இருந்த நச்சுகளாலும் அவனின் உடல்நலம் பாதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
Similar News
News February 22, 2025
முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.
News February 22, 2025
EXP ரயில் தடம் புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், மின்கம்பத்தில் மோதி ரயில் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
News February 22, 2025
BREAKING: 4 நாட்கள் வக்கீல்கள் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர். தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஸ்டிரைக்கில் ஈடுபடவும், 26ஆம் தேதி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.