News March 29, 2024
BREAKING: விசிகவுக்கு ஆதரவு அளித்த நடிகர் சூர்யா குடும்பம்

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவிற்கு எதிராக பாமகவும், ஆதரவாக விசிகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 18, 2026
20 தொகுதிகள் கேட்கிறதா CPM? திமுகவுக்கு நெருக்கடி

திமுக கூட்டணியில் 20 சீட்டுகள் கேட்டு CPM டிமாண்ட் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர், மதுரவாயல், தி.குன்றம், நாகை உள்ளிட்ட தொகுதிகளின் பெயரையும் திமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாம். ஏற்கெனவே, கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்ட நிலையில், 2 இடங்களில் வெற்றி பெற்றது.
News February 18, 2026
வெட்டி ஒட்டும் அட்டக்கத்தி அண்ணாமலை: VSB

<<19172256>>MP தயாநிதி மாறன்<<>> நகைச்சுவையாக பேசிய வீடியோவை வெட்டி ஒட்டி போட்டு அட்டக்கத்தி அண்ணாமலை அரசியல் செய்வதாக செந்தில் பாலாஜி(VSB) சாடியுள்ளார். கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை மத்திய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வாயில் வடை சுடுவதை கோவை மக்கள் நன்கு அறிந்ததாலேயே கடந்த லோக்சபா தேர்தலில் அண்ணாமலை தோற்றதாகவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
News February 18, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹720 குறைந்தது

தங்கம் விலை 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹90 குறைந்து ₹14,230-க்கும், சவரனுக்கு ₹720 குறைந்து ₹113,840-க்கும் விற்பனையாகிறது. 3 நாள்களில் மட்டும் சவரன் ₹2,640 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர். சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்துவருவதால், வரும் நாள்களிலும் குறையும் என கூறப்படுகிறது.


