News March 28, 2024
பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை பிறந்தது

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பீரித் கவுருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது முதல் மனைவியை கடந்த 2015ஆம் ஆண்டில் பகவந்த் சிங் மான் விவாகரத்து செய்தார். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர் குர்பீரித்தை அவர் 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் குர்பீரித்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Similar News
News February 26, 2026
வேட்புமனு தாக்கல் ஆன்லைனில் மட்டுமே?

இனி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைனில் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதை ECI அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. ஆனால் இதனை வேட்பாளர்கள் பயன்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், நேரில் மனுக்களை சரிபார்ப்பதில் எடுக்கும் நேரத்தை தவிர்க்க ஆன்லைன் முறையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
News February 26, 2026
லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இந்த 3 தாவரங்களை நடுவது வீட்டிற்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்படுகிறது. *துளசி: வீட்டின் முற்றத்திலோ அல்லது கிழக்கு திசையிலோ துளசி செடியை வைத்திருப்பது சிறந்தது *மணி பிளாண்ட்: வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்திருப்பது நல்லது *நெல்லிக்காய் மரம்: வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். SHARE IT.
News February 26, 2026
தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் (பிப்.26) 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,339) அதிகரித்து $5,183-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ், $1.49 உயர்ந்து $88.96 ஆக உள்ளது.


