News March 27, 2024
IPL: புதிய சாதனை.. 16 பந்தில் அரை சதம்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 16 பந்துகளை எதிர்கொண்ட இவர் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தற்போது வரை SRH 10 ஓவரில் 148/2 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 300 ரன்களை தொட வாய்ப்புள்ளது.
Similar News
News August 23, 2025
SPACE: பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?

பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள்
பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும்
சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும்
சுனாமி, பூகம்பங்கள் உருவாகும்
மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
News August 23, 2025
தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 23, 2025
காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.