News January 23, 2025

காய்கறிகள் விலை கணிசமாக குறைந்தது

image

பொங்கலையொட்டி அதிகரித்திருந்த காய்கறிகளின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ கத்திரிக்காய் ரூ.80க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.70 குறைந்து ரூ.10க்கு விற்கப்படுகிறது. உருளை, அவரைக்காய் 1 கிலோ ரூ.30ஆக குறைந்துள்ளது. முள்ளங்கி ரூ.10ஆக சரிந்துள்ளது. தக்காளி விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உங்கள் ஊரில் காய்கறிகள் விலை குறைந்துள்ளதா?

Similar News

News October 22, 2025

இந்தியா – வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் ரத்தா?

image

வங்கதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த பிறகு, இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது எனவும் வெளியுறத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

News October 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 496
▶குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

News October 22, 2025

ஸ்ரீலீலா தான் நேஷனல் கிரஷ்: ரன்வீர் சிங்

image

ஸ்ரீலீலா தான் உண்மையான நேஷனல் கிரஷ் என நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அவரது ஒழுக்கம் மற்றும் திறமை ஆசாத்தியமானது எனவும், ஸ்ரீலீலாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடஇந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அட்லீயின் விளம்பர படத்தில் நடித்திருந்தனர்.

error: Content is protected !!