News January 16, 2025
குறைந்தபட்ச சம்பளம் ₹51,480 ஆக உயரும் HAPPY NEWS

புதிதாக அமைக்கப்பட உள்ள 8-வது ஊதிய கமிஷன், இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய ஊதிய விகிதத்தை பரிந்துரைக்கும். Fitment factor அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர்கள் பலருக்கும் 186% வரை ஊதியம் உயரும். இதற்கு ஒப்புதல் கிடைத்தால், குறைந்தபட்ச ஊதியம் என்பது தோராயமாக ₹18,000-லிருந்து ₹51,480 ஆக உயரும். ஊதிய உயர்வால் மத்திய அரசின் 67.85 லட்சம் பணியாளர்களும், 48.62 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவர்.
Similar News
News August 24, 2025
DMK, TVK தான் போட்டி: பெங்களூர் புகழேந்தி

வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரியும் என பலர் கேட்பதாகவும், கட்சி தொடங்கிய 7 மாதங்களில் NTR ஆட்சி அமைத்தார். ஆதலால் அரசியலில் எதுவும் நடக்கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடுமாறிவிட்டார் என தனக்கு தெரியவில்லை என்றார்.
News August 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 24 – ஆவணி 8 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: துவிதியை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 24, 2025
ஓய்வறையில் கம்பீருக்கு வேற முகம்: ரிங்கு சிங்

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.