News January 12, 2025
தங்கம் விலை 4 நாள்களில் சவரனுக்கு ரூ.800 உயர்வு

1 கிராம் தங்கம் கடந்த திங்கள்கிழமை ரூ.7,215ஆகவும், சவரன் ரூ.57,720ஆகவும் இருந்தது. அதன்பிறகு செவ்வாய், புதன் அன்று அதே விலையில் தங்கம் விற்கப்பட்டது. ஆனால் புதன், வியாழன், வெள்ளி, சனி என 4 நாள்களும் விலை அதிகரித்தது. அதன்படி 4 நாள்களில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7,315க்கும், சவரன் ரூ.800 அதிகரித்து ரூ.58,520க்கும் நேற்று விற்பனையானது. இன்றும் அதே விலையிலேயே விற்கப்படுகிறது.
Similar News
News September 15, 2025
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. சாதனை பெண் PHOTO

மகராஷ்டிராவில் பெண் ஒருவர் நேற்று <<17711542>>ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்<<>> பெற்ற செய்தி வைரலாகி வருகிறது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர் யார் தெரியுமா? 2021-ல் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் Halima Cissé என்பவர் ஒரே பிரசவத்தில், 5 பெண், 4 ஆண் என மொத்தம் 9 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
News September 15, 2025
சுவிஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன்

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தின் வைஷாலி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகளை பெற்று வைஷாலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் 2026 உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
News September 15, 2025
EPS 4-வது இடத்துக்கு செல்வார்: புகழேந்தி

தொகுதிவாரியாக விஜய் செல்லும்போது EPS, 4-வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார், அண்ணா, MGR, ஜெ., வழியில் வந்த ADMK தொண்டர்கள், RSS கொள்கை (அ) BJP-ஐ பின்பற்ற தயாராக இல்லை என கூறியுள்ளார். எனவே, BJP-க்கும் ADMK தொண்டர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.