News January 12, 2025
அனைத்து தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம்

543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
விஜய்யுடன் கூட்டணி அமைக்க OPS தரப்பு முடிவு

BJP கூட்டணியிலிருந்து விலகிய OPS, யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில் அவரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க EPS-யிடம் நயினார் ஆலோசித்திருந்தார். ஆனால், OPS தரப்பை இணைக்கக்கூடாது என்பதில் EPS விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால், விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து OPS தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News August 5, 2025
சரும நோய்களை தடுக்கும் பாதஹஸ்தாசனம்

✦வாதம் வராமல் தடுக்கும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்
✦தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும்
✦வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும்
✦மார்பை விரிவுப்படுத்தும்.
✦இடுப்பும், பாதமும் வலுப்பெறும்.
✦உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
News August 5, 2025
பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன.
*பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
*வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது.
*சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.