News January 12, 2025
IND vs ENG: டிக்கெட் புக்கிங்குக்கு ரெடியாகுங்க..

IND vs ENG மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. நடைபெற உள்ளது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை ₹1,500ல் தொடங்கி ₹15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரின் மீலம் ஷமி அணிக்கு திரும்பியுள்ளார்.
Similar News
News August 5, 2025
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக: நயினார்

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக தான் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து விலகிய OPS குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த நயினார் தேர்தல் பணியில் முழுவீச்சில் பாஜக இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 5, 2025
சிராஜுக்கு மட்டும் பாரபட்சம்?

இந்திய அணியில் சிராஜுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பணிச்சுமை காரணமாக பும்ராவிற்கு அடிக்கடி ஓய்வு தரும் நிர்வாகம், சிராஜின் பணிச்சுமையை கருத்தில் கொள்ள தயங்குவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். நடப்பாண்டில் சிராஜ் 213.3 ஓவர்கள் வீசி 27 விக்கெட்களை வீழ்த்தியதையும், பும்ரா 129.4 ஓவர்கள் வீசி 16 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
News August 5, 2025
விஜய்யுடன் கூட்டணி அமைக்க OPS தரப்பு முடிவு

BJP கூட்டணியிலிருந்து விலகிய OPS, யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில் அவரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க EPS-யிடம் நயினார் ஆலோசித்திருந்தார். ஆனால், OPS தரப்பை இணைக்கக்கூடாது என்பதில் EPS விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால், விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து OPS தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.