News January 11, 2025
மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறதா?

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதாக எல்லா மதங்களுமே கூறுகின்றன. ஆனால், பகுத்தறிவாளர்கள் இதை மறுக்கின்றனர். இந்நிலையில், இந்த விஷயத்தை நம்பும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் வங்கதேசம் உள்ளது. அங்கு 98.8% பேர் இதனை நம்புகிறார்கள். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மொராக்கோ (96.2%), லிபியா (95.2%), துருக்கி (91.8%), ஈரான் (91.3%), பாக்., (89.3%) நாடுகள் உள்ளன.
Similar News
News September 15, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

<<17591466>>பஞ்சாப் நேஷனல் வங்கி<<>>, கரூர் வைஸ்யா வங்கிகளை தொடர்ந்து யுகோ பொதுத்துறை வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. செப்.10 முதல் MLCR வகை கடன் வட்டி விகிதங்களில் 5 அடிப்படை புள்ளிகள் (0.05%) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, MLCR வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90%-ல் இருந்து 8.85% ஆக குறைந்துள்ளதால், வீட்டு, வாகன கடன்களின் EMI தொகை குறைகிறது.
News September 15, 2025
ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அப்ளை செய்ய, அப்டேட் செய்ய…

*ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கெனவே உள்ள கார்டில் மாற்றம் செய்ய https://tnpds.gov.in/ தளத்துக்கு செல்லவும்.
*ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
*அதில், குடும்ப உறுப்பினர்கள் விவரம், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடவும்.
*தேவையான ஆவணங்களை, குடும்பத்தினர் போட்டோக்களை பதிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும். SHARE IT.
News September 15, 2025
அதிமுக மீண்டும் ஒன்றிணைவது உறுதி: சசிகலா

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது சிரமம், ஆனாலும் அதை செய்து முடிப்பேன் என சசிகலா திட்டவட்டமாக கூறியுள்ளார். MGR மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிளவை மீண்டும் இணைத்த அனுபவம் தனக்கு உள்ளது என்றார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும், ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற அண்ணாவின் வழியில் நடக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?