News January 11, 2025
இந்தியா VS இங்கிலாந்து T20I சீரிஸ்

IND VS ENG இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜன.22 முதல் தொடங்குகிறது. அதன் கால அட்டவணை (தேதி – நடைபெறும் இடம்) பின்வருமாறு: *1st T20I ஜன.22 கொல்கத்தா *2nd T20I ஜன.25 சென்னை, *3rd T20I ஜன.28 ராஜ்கோட், *4th T20I ஜன.31 புனே *5th T20I பிப்.2 மும்பை. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஜன.12) தொடங்குகிறது.
Similar News
News December 8, 2025
மீண்டும் பேட்டை சுழற்ற தொடங்கிய ஸ்மிருதி

பலாஷுடன் திருமணம் நிறுத்தப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த <<18495884>>ஸ்மிருதி மந்தனா<<>>, தனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார். வரும் 21-ம் தேதி இலங்கைக்கு எதிராக டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஸ்மிருதி பயிற்சி பெறும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. சோகத்தில் முடங்கிவிடாமல் சிங்கப் பெண்ணாக அவர் ஜொலிப்பதாக நெட்டிசனகள் சிலாகித்துள்ளனர்.
News December 8, 2025
ஜே.டி.வான்ஸின் சர்ச்சை பதிவு: கொதித்த நெட்டிசன்கள்

மிகப்பெரிய அளவிலான குடியேற்றம் (Mass Migration) அமெரிக்கர்களின் கனவை திருடுவதாக, USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘உங்கள் மனைவி உஷா இந்தியாவில் இருந்து USA-ல் வந்து குடியேறியவர் தானே’ என்றும் ‘உங்கள் மனைவியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்’ என பதிவிட்டு வருகின்றனர்.
News December 8, 2025
விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

அதிமுக Ex அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டிற்கு ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


