News March 25, 2024
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தொண்டர்களோடு தொண்டராக துணை நிற்கவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடையவும், தொழில் வளர்ச்சியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் தென்சென்னை வீறுநடைபோடவும் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஆளுநராக இருந்த தான் அக்காவாக திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 19, 2025
2026 தேர்தல்: தவெக ஐடி விங் ஆலோசனை!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண கூடத்தில் தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஐடி மற்றும் சோஷியல் மீடியா பிரிவு சார்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். 2026 தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
News April 19, 2025
திருமணம் ஆகாமலே பிரபல நடிகை கர்ப்பமா?

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.
News April 19, 2025
மதிமுகவில் இருந்து துரை வைகோ விலகியது ஏன்?

மதிமுகவிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், கட்சியை சிதைக்கவும் ஒருவர் முயல்கிறார் எனவும், என்னால் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதால் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நாளை நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.