News March 23, 2024
ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 208/7 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசியில் களமிறங்கி அதிரடியாக ஆடிய ரமன்தீப் 35, ரிங்கு சிங் 23, ரசல் 64* ரன்கள் விளாசினர். SRH தரப்பில் நடராஜன் 3, மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News April 30, 2025
ரெட்ரோ கதை இதுதான்.. வெளியான டுவிஸ்ட்

வன்முறைகளைக் கைவிடுவதாக சபதம் ஏற்ற ஒரு கேங்ஸ்டர், தனது குடும்பத்தைப் பாதுகாக்க சபதத்தை மீறி வன்முறையைக் கையிலெடுக்கிறார், இந்த தமிழ் படம் ரத்தக்களரி மிகுந்தது என ரெட்ரோ படம் குறித்து பிரிட்டிஷ் திரைப்பட வாரியம் UK ரிலீஸையொட்டி தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 1-ல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.
News April 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 30, 2025
ஏமாற்றினாரா அஜித்? வைரலாகும் நடிகையின் பதிவு

அஜித்தின் ஆரம்பகால பயணத்தில் நடிகை ஹீராவுடனான காதல் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தவறான தகவலைக் கூறி தனது நற்பெயரை கெடுத்துவிட்டதாகவும் ஜனவரியில் வெளியான ஹீராவின் பதிவு, அஜித் பத்மபூஷன் விருது பெற்ற நாளன்று வைரலானது. ஆனால், இந்தப் பதிவில் அவர் அஜித் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், இதற்கு பின்னால் சதி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.