News March 23, 2024
மோடி ஆட்சி நாட்டுக்கு கேடு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். மோடி தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். அவரின் ஆட்சி தொடர்ந்தால் இந்தியா இருக்காது. அதை தடுத்து நிறுத்த, மோடியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News April 28, 2025
உங்களுக்கு பர்சனல் லோன் இருக்கா? இத கவனியுங்க!

பர்சனல் லோனை விரைவாக அடைக்க: ◆ஆண்டுக்கு ஒரு மாத EMI-யை கூடுதலாக செலுத்த முயற்சியுங்கள். இது அசலுடன் சேர்த்து வட்டித் தொகையையும் குறைக்கும் ◆உதாரணத்துக்கு EMI ₹4375.30 என்றால், அதை ரவுண்டாக (₹4500) செலுத்த பழகுங்கள் ◆குறைந்த வட்டிக்கு மாறுங்கள்: வாங்கிய லோனை விட குறைந்த வட்டி கேட்கும் லோன் திட்டங்களில் (உ-ம்: பிபிஎப், வேறு லோன்கள்) கடன்பெற்று இதை அடையுங்கள். இதற்கு நீங்கள் வங்கியில் பேசவேண்டும்.
News April 28, 2025
நான் ராஜினாமா செய்ய தயார்: செல்வப்பெருந்தகை சவால்

நீட் தேர்வை பாஜக தான் சட்டமாக கொண்டுவந்தது; காங்கிரஸ் இல்லை என்று காங்., கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சட்டம் காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்த அவர், பாஜக ஆட்சியில் என்று நிரூபித்தால் நீங்கள்( பாஜக எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
News April 28, 2025
குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட யோகம் பெறும் 5 ராசிகள்

வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.