News December 16, 2024
‘சூர்யா 45’ படத்தில் இணைந்த யோகி பாபு

RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
Similar News
News August 19, 2025
நாகை: 4 நாட்களுக்கு பயணிகள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்காலில் இருந்து நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வரும் ஆகஸ்ட் 24, 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காரைக்கால் – திருவாருர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News August 19, 2025
குழந்தைக்கு மாத்திரை தரும் போது கவனமா இருங்க!

குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிறு மாத்திரை என்றாலும் அப்படியே கொடுப்பதால் பெரும் இன்னலை சந்திக்க நேரிடலாம். திருத்தணியில் மாத்திரையை அப்படியே முழுங்கியதால், சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கி, 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. மாத்திரையை பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News August 19, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. ராமதாஸ் ஆதரவாளர்கள் குரல்

அதிமுக கூட்டணியில் அன்புமணி, திமுக கூட்டணியில் ராமதாஸ் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸூக்கு வழங்கியபோதும், பின்னர் நீங்கள் (நிர்வாகிகள்) விரும்பும் கூட்டணியை அமைப்பேன் என்று ராமதாஸ் பேசியபோதும் ‘அதிமுக..அதிமுக..’ என கட்சி நிர்வாகிகள் குரல் எழுப்பினர். இதனால், கூட்டணி கணக்கு மாறுமா என கேள்வி எழுந்துள்ளது.