News December 13, 2024

18,000 இந்தியர்களை கொத்தாக வெளியேற்றப் போகும் டிரம்ப்

image

US அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், US இமிக்ரேஷன் டிபார்மென்ட், நாடு கடத்த வேண்டியவர்கள் லிஸ்டை ரெடியாக வைத்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியுள்ள 15 லட்சம் பேரை கொத்து கொத்தாக அனுப்ப உள்ளார் டிரம்ப். முதல் லிஸ்டில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பஞ்சாப், குஜராத், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான் இதில் பெரும்பான்மை. இதுதவிர, இந்தியாவை ஒத்துழைக்காத நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளதாம் அமெரிக்கா.

Similar News

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

News March 24, 2026

72 hour-க்கு முன் கேன்சல் செய்தால் தான் காசு கிடைக்கும்!

image

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான விதிகளில் IRCTC மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கட்டணம் திருப்பி தரப்படாது; 8-24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் 50% பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே இனி முழு கட்டணமும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ₹2,720 குறைந்த நிலையில் மாலை ₹2,000 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ₹12,750-க்கும், 1 சவரன் ₹1,06,000-க்கும் விற்பனையாகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் நேற்று ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. பின்னர் இன்று காலை குறைந்த நிலையில், மீண்டும் உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!