News March 23, 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரவீந்திரா 37 ரன்கள் எடுத்தார்.
Similar News
News December 7, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.08) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சம்பாளையம், தேவணாம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றுபாளையம், அவல்பூந்துறை, சென்னிமலைபாளையம், கவுண்டச்சிபாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.


