News March 22, 2024

கோலிக்கு இன்னும் 15 ரன்கள் தேவை

image

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை 985 ரன்கள் எடுத்துள்ள அவர், இன்னும் 15 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். முதல் இடத்தில் ஷிகர் தவான் (1,057) உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் தோனி (740) முதல் இடத்தில் உள்ளார்.

Similar News

News October 24, 2025

மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

image

பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி, மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ₹1,000 வழங்கப்படும் என்றார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

News October 24, 2025

உலகில் நம்ப முடியாத உண்மைகள்

image

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியது. இங்கு நம்ப முடியாத விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய பார்வையைத் தருகிறது. இதில், சிலவற்றை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவலை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!