News December 4, 2024
ரயில் புறப்பட தாமதமானால் இலவச உணவு

ரயில் புறப்படுவதற்கு 2 மணிநேரம் அல்ல, அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு IRCTC இலவசமாக உணவு வழங்குகிறது. தற்போது ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ EXP போன்ற பிரீமியம் ரயில்களில் இச்சிறப்பு சேவை கிடைக்கிறது. டீ, காபி, பிஸ்கட், ரொட்டி, மதிய, இரவு உணவுகளை ஆர்டர் செய்யலாம். ரயில் ஏறுவதற்கு 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், டிக்கெட்டை ரத்து செய்து பிடித்தமின்றி மொத்த கட்டணத்தையும் ரீபண்ட் பெறலாம்.
Similar News
News August 23, 2025
முன்பு போல் என்னால் முடியவில்லை: சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீண்டார். இதனைத் தொடர்ந்து, கணவரிடம் இருந்து பிரிந்தார். இவ்வாறு பல தடைகளைக் கடந்து வந்ததால், முன்பு போல் தற்போது தன்னால் இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நெருக்கமான கதைகளில் மட்டுமே நடிப்பது, உடற்பயிற்சி ஆகியவையே பிரதானமாம்.
News August 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும்.
➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
News August 23, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.