News December 4, 2024
ஐன்ஸ்டீனை தூக்கி சாப்பிட்ட 10 வயது சிறுவன் !

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவன் கிரிஷ் அரூரா. இவர் மென்சா நடத்திய IQ தேர்வில் 162 ஸ்கோர் செய்து உலகின் 1% அதிகூர்மையானவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில், கற்றுக்கொண்ட 4 மாதங்களில் தனது ஆசிரியரை தோற்கடித்த கிரிஷ், 4 வயதிலேயே சிக்கலான கணித சமன்பாடுகளுக்கு சரியாக பதிலளித்துள்ளாராம். ஐன்ஸ்டீனின் IQ 160 என கணிக்கப்படுகிறது. சைல்ட் ப்ரோடிஜி!
Similar News
News August 23, 2025
TN அரசியல் தெரிந்தபின் விஜய் அரசியலுக்கு வரட்டும்: எச்.ராஜா

தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர விஜய் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். பாஜக கொள்கை ரீதியான எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? என கேட்டார். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன் என்றார். மேலும், வாக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.
News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.