News December 2, 2024
நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: 12th fail ஹீரோ

12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாசே, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர் தி சபர்மதி ரிப்போர்ட், ஹசீன் தில்ரூபா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 22, 2025
Dream 11 கேமுக்கு தடை

ஆன்லைன் கேமிங் மசோதா-2025 நிறைவேறிய நிலையில், Dream 11 கேம் நிறுத்தப்படும் என டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை கேம்களையும் நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. FanCode, DreamSetGo, மற்றும் Dream Game Studios ஆகியவை மட்டும் செயல்படும். 2024-ல் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈட்டிய ₹9,600 கோடி வருமானத்தில் 90% Dream 11-ல் இருந்தே கிடைத்ததாம்.
News August 22, 2025
கைகளை வலுப்படுத்தும் ‘அதோ முக ஸ்வனாசனா’

✦இது கைகள், கால்கள், தோள்பட்டை & முதுகெலும்புக்கு வலுப்படுத்தும்.
➥கால்களை விரித்து வைத்து, முதுகு நேராக இருக்கும் படி நிற்கவும்.
➥பிறகு முட்டியை மடக்காமல், காலை நகர்த்தாமல், கைகளை படத்தில் போல நீட்டி, தரையிலும் ஊன்றவும்.
➥உடல் தலைகீழாக V வடிவில் இருக்கும். 15- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.